தூய தமிழ்?
இதில் உள்ள 125 இற்கு மேற்பட்ட தமிழ் அல்லாத சொற்களை கண்டு பிடிக்கமுடியுமா?
"நான் ஓர் இந்தியப் ப்ரஜை, இதன் அர்த்தம் சட்டரீதியாக ப்ரஜாவுரிமை ஊர்ஜிதம் செய்யப்பட்ட பொதுஜனங்களில் ஒருவன். எனது சகோதரன் சகோதரிகளும் அவ்வாறே, இதில் எந்த விநோதமும் இல்லை. விஞ்ஞானம் படித்து பரிட்சை எழுதி கிடைத்த அங்கீகாரத்தினால் அரச காரியாலயத்தில் உத்யோகம் கிடைத்தது. அந்த வயதில் அனுபவம் குறைந்த அதிகாரி, தினமும் நித்திரை இல்லாமல் சம்பந்தப்பட்ட அவசியமான விடயங்களை உதாரணமாக சரித்திரம், சுகாதாரம், வர்த்தகம், அபிவிருத்தி, பத்திரிக்கை, ராணுவம் போன்றவற்றில் எனது அறிவை விஸ்த்தரிப்பு செய்ததில் அலுவலகத்தில் கௌரவம் கூடியது. அரச காரியாலயத்தில் அபூர்வமாக இப்படி அர்ப்பணித்து செயற்படும் ஒருவனாக நான் இருப்பதாக எல்லோரும் அபிப்ராயப்பட்டார்கள். அடுத்த மாதமே அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்ததால் சம்பளத்தில் ஒரு இலக்கம் கூடியது. இதனால் ஏற்பட்ட ஆனந்தத்தில் ஆலயம் சென்று அர்ச்சனை அபிஷேகம் செய்து சந்தோஷத்தை கொண்டாட முடிவு செய்தேன்.
ஆலயத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீலஸ்ரீ வரப்ரசாத சுவாமிகள் சக்தி, சிருஷ்டி, ஜென்மம், இராகம், சங்கீதம் என்று ஒரே தத்துவமாக பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். என்ன ஆச்சர்யம் அங்கு வந்திருந்த பிரதம அதிதி, கவர்னர், நீதிமான், சர்வதேச பாஷை நிபுணர் எல்லோர் கண்ணிலும் நீர்வீழ்ச்சி அளவிற்கு கண்ணீர் கரைவதை காணமுடிந்தது. இடையிடையே கரகோஷம்வேறு ஒரே சப்தமாக ஒலித்தவண்ணம் இருந்தது.
எனக்கு அருகில் உட்கார்ந்திருந்த நபர்கள் யாரென என்னால் அனுமானிக்க முடிந்தது, ஒருவர், சமீபத்தில் பாராளுமன்றத்தினால் யுத்த தளவாடங்கள் விநியோகம் தொடர்பான பிரச்சனையில், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு எதிரான தீவிரவாத அங்கத்தினருடன் தொடர்புடையவர் என்று, மந்திரிசபையின் ஆட்சேபணைகளால், சந்தேகத்தின் அடிப்படையில், இராஜிநாமா கோரப்பட்டு சஸ்பென்ட் செய்யப்பட்ட விஞ்ஞானி, மற்றவர் வியாதிகளுக்கு தீர்வு விரதம் அனுஷ்டிப்பதுதான் உத்தேச இலாபம் என்று சபதம் செய்துவிட்டு ஆலய விஜயம் செய்யும் அன்பர்.
இருவரும் மிகவும் ஜாக்ரதையாக, பிரசங்க கோஷங்களால் எந்த சங்கடமும் இல்லை என்பதுபோல் தங்களுக்குள் அவர்கள் இஸ்டத்திற்கு, சினிமா விமர்சனம், இந்த வருட பட்ஜட்டால் யாருக்கு எத்தனை வீதம் நஷ்டம், சமாதான நடவடிக்கை மற்றும் யுத்த நிறுத்த உத்தரவாதம் தொடர்பாக அயல் நாட்டுத் தூதுவரின் விசேஷ பேட்டி, சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்யம் தொடர்பான அரச கெஜட் அமுல்படுத்துதலில் உள்ள இடர்பாடுகள், என்று சகலதையும் அலசிக்கொண்டிருந்தார்கள்.
எனக்கு தொடர்ந்து இருக்க பிடிக்கவில்லை. வெளியில் வந்தால் ஆகாயம் இருண்டு கிடக்கு, வாயு பகவானும் ஏதோ எண்ணத்தில் இருப்பதாக தோன்றியது.
நிலுவையில் உள்ள வேலைகள் என்னவென்று யோசித்தவாறு அவசரமாக கிளம்பினேன்.
நாளைக்கு நண்பனின் பாட்டனாரின் ஈமக்கிரியை ஞாபகம் வந்தது, போய் அஞ்சலி செலுத்தி அனுதாபத்ததை தெரிவிக்கவேண்டும்.
வீட்டில் வாடகைக்கு இருப்பவர், என்னால் ஏதோ ஓர் காரியம் ஆகவேண்டும் என்று சொன்னவர், என்னவென்று தெரியவில்லை? அவருடைய போர்சனில் அலுமாரிப் பிணைச்சல் மாத்தவேணும், கக்கூஸ் பிரச்சனையும், பின்கதவு தாழ்பாள் பிரச்சனையும் ஏற்கனவே மாத்தியாச்சுத்தானே? ஏற்கனவே வாடகை பாக்கி, தவிர அந்தாளுக்கு நான் தேவையில்லாமல் பொலிசில் ஜாமீன் கொடுத்து அபராதம் வேறு கட்டியிருக்கிறேன் என்று மனைவி தினமும் வருத்தப்பட்டுக் கொள்கிறா, ஆனால் இம்முறை கட்டாயமாக அவரிடம் சொல்ல வேண்டும், அவரது வீட்டு மிருகத்தை பின் விறாந்தையில கட்டிப்போடுங்கோ என்று, கூடவே வாடகை பாக்கி இல்லாமல் பூஜ்யம் ஆக்கும்படி, பின்னர் பிரதி மாதமும் தவறாது வாடகையை தர சொல்லவேணும். ஆனால் அவர் ஆமோதித்தால், நிச்சயம் வாதம் பண்ணவேண்டும் இல்விட்டால் நான் வீட்டில இருக்கிறது கஷ்டம்.
படலையைத் திறந்து உள்ளே வந்து போர்ட்டிக்கோ லைட்டை போட, அது பிரகாசமாக எரியத் தொடங்கியது."

நான் கண்டு பிடித்த வேற்று மொழிச் சொற்கள்:
பிரஜை, ஊர்ஜிதம், ஜனம், விநோதம், உத்யோகம், சரித்திரம்
அபி(விருத்தி), விஸ்த்தரிப்பு, காரியாலம், அபிப்ராயம்,அதிர்ஷ்டம் ,அபிஷேகம், சந்தோஷம், கும்பம், சிருஷ்டி, ஜென்மம், பிரசங்கம்,ஆச்சர்யம், கவர்னர், பாஷை (கர)கோஷம், அனுமானம், ஸ்திரத்தம், ஆட்சேபணை, இராஜிநாமா,சஸ்பென்ட், அனுஷ்டி, விஜயம், சபதம், ஜாக்ரதை, இஸ்டம், சினிமா, பட்ஜட், வீதம், நஷ்டம், உத்தரவாதம்,விசேஷம், பேட்டி, சுனாமி, கெஜட், வாயு, பகவான், ஈமக்கிரியை, அஞ்சலி, அனுதாபம், போர்சன், அலுமாரி, கக்கூஸ், பொலிஸ், ஜாமீன், விறாந்தை, பூஜ்யம், பிரதி, கஷ்டம், போர்ட்டிக்கோ, லைட், பிரகாசம்.
57 சொற்கள்......
Posted by Anonymous | 8/5/05 2:08 am
பேசாம தமிழ்ச் சொற்களை மட்டும் கண்டுபிடிச்சால் என்ன?
அது எண்ணீக்கை குறைவா இருக்கே!
Posted by துளசி கோபால் | 8/5/05 4:18 am
//பேசாம தமிழ்ச் சொற்களை மட்டும் கண்டுபிடிச்சால் என்ன?
அது எண்ணீக்கை குறைவா இருக்கே!//
:-) :-)
Posted by Muthu | 8/5/05 5:01 am