Thursday, July 21, 2005

பரட்டைத்திரிசங்கு சாமியாரேநெஞ்சில் ஒரு களங்கமில்லை

இனி ரசிகன் நெஞ்சில் ஒரு களங்கமுமில்லை,
எந்த நடிகருக்கும் பின்னால் போவதில்லை,
Voice கேட்டு உள்ளூர் அரசியல்வாதிகளை முறைப்பதில்லை,


சொல்லில் ஒரு வஞ்சமில்லை

இனி ரசிகன் சொல்லில் ஒரு வஞ்சமில்லை
அடுத்த முதல்வர் நீ என்று சொல்லவேண்டிய ஒரு வஞ்சமில்லை
உனது கல்லாவை நிரப்ப தைரியமா லட்சுமியை சரணடைந்ததால்

வஞ்சமில்லா வாழ்க்கையினில்

இனி ரசிகன் வஞ்சமில்லா வாழ்க்கையினில்,
கிடைக்கும் சிறு கூலி குடும்பத்திற்கே, குழந்தைகளுக்கே
கொடிகட்டவும், கட்டவுட்டுக்கு பால் ஊத்தவும் கிடையாது,

தோல்வியும் இல்லை!

இனி எந்த ரசிகனுக்கும் தோல்வியும் இல்லை,
நடிகனே, நீ எப்பிடியாவது உன் தன்மானத்தை விற்றுக்கொள்
எங்கள் தன்மானத்தை விற்க தயாராக இல்லை,
தோல்வியும் இல்லை

நல்லவங்களை ஆண்டவன் சில நேரங்களில் சோதிப்பான்,
ஆனால் கை விட மாட்டான்.
நல்லவங்களை நடிகன் பல நேரங்களில் பயன்படுத்திக்கொள்வான்,
ஆனால் கை விட்டுவிடுவான்.

பரட்டைத்திரிசங்கு சாமியாரே

நீ எப்பாவது வா, எப்படியாவது வா
இல்லை வராமலே இரு
ஆனால்,
தன்மானம் என்னும் ஆடையில்லாமல் வராதே,
இதை ஒரு முறை சொல்வதே அசிங்கம்,
100 முறை சொல்ல வைக்காதே
.

Tuesday, July 19, 2005

தூய வெள்ளை அறிக்கை


இங்கு எந்தவிதமான 'ego-trip' உம் இல்லை.


தமிழ் வலைப்பதிவுகள், வலைப்பதிவாளர்கள், பின்னோட்டங்கள், போலிப் பதிவுகள், போலிப்பின்னோட்டங்கள், பெருசுகளின் ஆலோசனைகள், புதுசுகளின் குழப்பம், எதிர்கால திட்டங்கள், நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள் - ஒரு தூய வெள்ளை அறிக்கை.......அடிக்குறிப்பு:
படம் காட்டுவதை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவருக்கு எனது நன்றிகள்

Wednesday, July 06, 2005

சத்தியசோதனை - தமிழ்மணத்திற்கு


மூர்த்தி அவர்களே,

நான் ஏற்கனவே உங்களுடைய முந்தைய பதிவிற்கு கூறிய பதிலை ஞாபகப்படுத்துவதுடன் மேலும் சில வரிகள் கூற ஆசைப்படுகிறேன்.

"பாதையில் அசிங்கங்கள் உள்ளன போகும்போது பார்த்து போங்கோ" என்று சொல்வதைவிட்டு, கூடவே அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக அந்த அசிங்கங்கள் மீது மூக்கினை வைக்கும்படி செய்து "பார் அவன் எப்படி அசிங்கப்படுத்தியுள்ளான்" என்று கூறுவதுபோல் உள்ளன, உங்கள் பதிவில் உள்ள இணைப்புகள். இதனால் உங்கள் மீதுதான் அதிக கோபம் வருகிறது.

"ஜாதி இரண்டொழிய வேறில்லை. ஒன்று ஆண்ஜாதி. மற்றொன்று பெண்ஜாதி. இட்டார் பெரியோர், இடாதோர் சிறியோர்" எனபதில் எனக்கு முழுமையான உடன்பாடுதான், ஆனாலும் உங்கள் மீது கோபப்பட வைக்கிறீர்களே.

தமிழர்களாகிய நாம் அங்கிங்கென உலகெங்கும் பரந்து வாழ்கின்றோம். மற்றைய மொழி வலைப்பதிவுகளுக்கு கிடைக்காத ஒரு வரமாக, எமக்கு தமிழில் உள்ள வலைப்பதிவுகளை ஒரே அரங்கத்தில் ஒழுங்குபடுத்தி பார்ப்பதற்கான வசதியினை ஏற்படுத்தித் தந்தவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்களை சங்கடப்படுத்தும் செயல்களையாவது செய்யாமல் இருப்பது மேல்.

மேலும் உங்களுடைய முந்தைய பதிவிற்கு தமிழ்மணத்தினூடாக பார்க்கும்போது தெரிகிற பின்னூட்டங்கள் 123453, ஆனால் உங்களுடைய பதிவில் நேரடியாக தெரிகிற பின்னூட்டங்கள் 25 மட்டுமே, எனவே நான் சுவடு சங்கர் போன்று எப்படி இதனை செய்தீர்கள் என்று உங்களிடம் கேட்கமாட்டேன், அதற்கு நீங்கள் கூறியிருந்த பதிலையும் நம்பமாட்டேன்.

நான் தமிழ்மணம் காசி மற்றும் மதி அவர்களைத்தான் கேட்பேன், ஏனெனில் Blogspot இல் 25 ஆக உள்ள பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் மட்டும் 123453 ஆக தெரிகின்றமைக்கு அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ கவனக்குறைவாக இருந்திருக்கிறார்கள் என்பது எனது தாழ்மையான கருத்து.

தமிழ்மணத்தின் சேவையை சந்தேகப்படவைத்துவிட்டீர்களே.

உங்களுக்கும் இன்னொருவருக்கும் பிரச்சனை என்றால் அதனை, அதை வெளியில் எங்காவது வைத்து தீர்வுகாணுங்கள். நீங்களோ அல்லது அவரோ ஏன் இதனை பொது இடத்தில் வைத்து தீர்வுகாண முயற்சிக்கிறீர்கள். தனியான ஓர் இடத்தில் இருவருமே வாள் எடுத்துக்கூட சண்டைபோடலாம் அதில் தவறில்லை, இருவருமே ஏன் பொதுவான இடத்தில் வைத்து சண்டையிடுவதன்மூலம் அந்த இடத்தையும் அங்குள்ள என்னைப்போன்ற பலரினை சங்கடப்படுத்துகிறீர்கள்.

இந்த 3 வாரங்களில் பதிவுகளில் பின்னூடங்களை காண்பதே அரிதாக உள்ளது. இணையத்தில் புதிதாக எழுத வருபவர்களுக்கு, பின்னூட்டங்கள்தான் முக்கியமான ஊக்கங்கள். தமிழ்மணத்தை பார்த்து, படித்து புதிதாக எழுதுவதற்கு வந்த எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன்.

இப்ப உள்ள நிலைமையில் வலைப்பதிவுகளைப்பற்றி தெரியாதவர்களிடம் இதனை அறிமுகப்படுத்தமுடியாமல் உள்ளது. இதையோ நீங்கள் அடிக்கடி படிக்கிறியள் என்று ஏதோ ஒரு ஜந்துவை பார்ப்பதுபோல் வீட்டில் உள்ளவர்கள் சிரிக்கும்படியாக உள்ளது.

நமக்குக் கிடைக்கும் சிலமணி நேரங்களை இது போன்ற வீண் சர்ச்சைகளில் விரயம் செய்யாமல் ஆக்கபூர்வமாக பயனுள்ளதாக ஆக்கலாமே.

இன்று தமிழ்மணத்திற்கு வர வேண்டுமா என்று சிலர் எண்ணும் அளவிற்கு வந்துள்ளனர். இது தொடரத்தான் வேண்டுமா என்ன?


இது மூர்த்தி அவர்களின் பதிவினை பார்த்தவுடன் , அவரது பதிவிற்காக எழுதிய பின்னூட்டம், தனிப்பதிவாக இடப்பட்டுள்ளது