« Home | பரட்டைத்திரிசங்கு சாமியாரே » | தூய வெள்ளை அறிக்கை » | சத்தியசோதனை - தமிழ்மணத்திற்கு » | எல்லாரும் காட்டிய வழியில்...... » | இப்பவே Longhorn » | தமிழ்மணத்தில் பிளவாழுமை » | தார் பூசப்பட்ட ஆங்கில பெயர்ப்பலகை. » | கமலும் தமிழ்ப்பண்பாடும் » | திருப்பதி அல்வா » | இடைத்தேர்தல் முடிவுகள் - 2006 அச்சம் »

புரட்சித்தமிழரசுக் கட்சி (Fully Computerised)

நாம் கணனி மயப்படுத்தப்பட்ட யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று சாதாரண மளிகைக்கடை தராசு முதற்கொண்டு பழம் பெருமை வாய்ந்த கோவில்கள் வரை, சினிமா கொட்டகை முதல் அரச அலுவலகங்கள் வரை, வாக்காளர் அட்டை முதல் தேர்தல் இயந்திரம் வரை, கணனிமயப்படுத்தப்பட்டு மக்களின் மனதில் ஒரு அழுத்தமான நன்நம்பிக்கையை, அதாவது கணனிமயப்படுத்தப்பட்ட ஒரு விடயம், மிகவும் சரியானது, துல்லியமானது, வெளிப்படையானது, இதில் தவறு நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று உண்மையகவே மக்கள் எண்ணும் அளவிற்கு உள்ளன.

அடுத்ததாக மக்கள் தற்போதுள்ள அரசியல்வதிகளையும் அரசியலையும் மிகவும் வெறுக்கிறார்கள், காரணம் அவர்களுடைய ஊழல்களும்,வன்முறைகளும், மக்கள் நலனில் அக்கறையில்லாமல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கபட போக்குமேயாகும். ஒரு உயர் அதிகாரி பெரிய அளவில் ஊழல் செய்ய முற்படுகிறார் என்றால், நிச்சயமாக அவருக்கு பின்புலமாக யாரோ ஒரு அரசியல்வாதி யும் அரசியல் கட்சியும் இருக்கும்.

எனவே தற்கால அரசியலில் தேவையக உள்ளது, தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லும், மக்கள் நலனை காக்கும், ஊழல் செய்வதை எந்த நிலையிலும் ஆதரிக்காத, வெளிப்படையான, ஒரு கணனிமயப்படுத்தப்படட கட்சியாகும்.

அதுவே புரட்சித்தமிழரசுக் கட்சியாகும்.

தற்போதுள்ள கட்சிகளின் கொள்கைகள், நடைமுறைகள், பண்பாடுகள், அமைப்பு முறைகள், செயல்பாடுகள், ஊழல்கள் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டு, தமிழக நலனே பெரிதாக எண்ணுவதால் சேர்க்கப்பட்டது - புரட்சி
(எனவே ஏற்கனவே புரட்சி எதுவும் செய்யாமல் தங்கள் பெயருடன் புரடசியை சேர்த்து வைத்திருக்கும் நேற்றைக்கு வந்த புரட்சி புரோகிராமர் வரையானவர்களுடன் எங்களை ஒப்பிட/சேர்க்க வேண்டாம்.)

தமிழ்நாட்டை/தமிழனை தமிழன்தான் அரசு செய்திடல் வேண்டும் என்று எண்ணுவதால் சேர்க்கப்பட்டது - தமிழரசு

கழகம் என்றால் ஊழல், ஊழல் என்றால் கழகம் எனவே ஊழல் அற்றறதால் சேர்க்கப்பட்டது - கட்சி

கட்சியின் அடிப்படைக் கொள்கைகள்

1.எம்மதமும் சம்மதமே, சாதி வேற்றுமை/பாகுபாடுகளும் இல்லை, சாதி வேறுபாடு பார்ப்பவர்களுக்கு கட்சி அங்கத்துவம் இல்லை. அதேபோல் மாற்றுக் கட்சியினரையும் சக நண்பராக/மனிதராக மதித்தல் வேண்டும் கொள்கை ரீதியான வேறுபாடுகள், தனி மனித உறவுகளுக்கு தடையாக இருக்க அனுமதிக்க கூடாது. மாற்றுக் கருத்து உள்ளவர்களுடனும் தனிப்பட்ட மனிதத்துவம் சீரிய முறையில் பேணப்படல் வேண்டும். எந்த நிலையிலும் மாற்றுக்கட்சியினரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை விமர்சனம் செய்யக்கூடாது.

2.கட்சியின் அங்கத்துவம், செயல்பாடுகள் அனைத்தும் கணனியால் கையாளப்படும், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அட்டை உள்ளவர்கள், தமிழ்நாட்டின் எந்த இடத்தில் இருந்தும் on-line இல் கணனிமூலம் அங்கத்துவம் பெறலாம். நீதிமன்றத்தில் வழக்குகளில் சிக்கியவர்கள், தண்டிக்கப்பட்டவர்கள், தீய பழக்கவழக்கமுள்ளவர்கள் கட்சியின் எந்த ஒரு பதவிக்கும் போட்டியிட முடியாது. ஏற்கனவே வேறு கட்சிகளில்/கழகங்களில் இருந்தவர்கள்களுக்கும் 15 வருடங்களுக்கு கட்சியில் எந்த பதவியும் தரப்படமாட்டாது. சாதாரண அங்கத்தினராக மட்டுமே இருக்கமுடியும். அனைத்து அங்கத்தினரதும் தகுதி, சொத்து விபரங்கள் இணையம்
மூலம் பொதுமக்கள் பார்வையில் இருக்கும். அங்கத்தினர் எந்தச்சந்தப்பத்திலும் வன்முறையில் இறங்கக்கூடாது. ஒழுக்கத்தை கடைப்பிடித்தல் அவசியம்.

3.சமூக அக்கறையுள்ள நற்பண்புள்ளவர்களுக்கும், கல்வித்தகுதி உள்ளவர்களுக்கும் முன்னுரிமை. வேலை வெட்டி இல்லாதவர்கள்களும், அரசியலால் தரகு வேலை பார்த்து பொருளீட்டுபவர்களும், அரசியலை ஒரு தொழிலாக எண்ணுபவர்கள்
வெளியேற்றப்படுவார்கள், ஒரு முறை வெளியேற்றப்பட்டவர் மீண்டும் எக்காரணத்தினாலும் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள்.

4.கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும். யாரையும் முதல்வராக முன்னிறுத்தி தேர்தலில் வாக்குகள் கோரப்படமாட்டாது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவர், சட்ட சபையில் தலைமை தாங்குவார் அதாவது கட்சி ஆட்சியமைக்கும் நிலைகளில் முதல்வராகவும், எதிர்க்கட்சியாக உள்ளபோது எதிர்க்கட்சி தலைவராகவும், அதுவும் இல்லையெனில் சட்டசபை கொறடாவாகவும் செயல்படுவார். அடுத்தடுத்த நிலைகளில் உள்ளவர்கள் அடுத்தடுத்த பதவிகளை பெறுவர்.

5.கட்சியின் தலைவர் ஆட்சியில் எந்த ஒரு நிலையிலும் பங்கு பெறமாட்டார். தேர்தலிலும் போட்டியிடமாட்டார். அவர் தனது தொழிலை செய்துகொண்டு இருப்பார். உட்கட்சி தேர்தல் மூலமே கட்சித்தலமை தெரிவு செய்யப்படும். மற்றைய கட்சியின் கண்ணியம் மிக்க அங்கத்தினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றறும் பொதுமக்கள் முன்னிலையில் இத்தேர்தல் நடைபெறும்.

6.கட்சி பொதுமக்களுக்கு இடையூறாக எந்த நிலையிலும் இருக்காது. பொதுக்கூட்டங்கள், மாநாடுகள்,ஊர்வலங்கள் என்று எதுவுமே நடத்தப்படமாட்டாது. ஏற்கனவே உள்ள தொலைக்காட்சிகளில், மக்கள் நேரடியாக கட்சியின் செயல்பாடுகள் பற்றி மிகவும் வெளிப்படையாக தெரிந்து கொள்ளும்வண்ணம் மக்கள் பங்குபற்றும் நேரடி நிகழ்ச்சிகள் தினமும், ஒவ்வொரு பகுதிவாரியாக நடத்தப்படும். இதன் மூலம் தொலைக்காட்சித் தொடர்களால் மக்கள் அவதியுறுவது தவிர்க்கப்படுவதுடன் பொதுமக்களுக்கு அரசியலில் நம்பிக்கையை உண்டுபண்ண முடியும்.

7.கட்சிக்காக நிதி கசோலையாகவே மட்டும் பெறப்படும், அதுவும் பொதுமக்கள் பங்கு பெறும் நேரடி நிகழ்ச்சிகளில். கட்சியின் வரவு-செலவு விபரங்கள் தினமும் இணையத்தில் பொதுமக்கள் பார்வைக்கு இணைக்கப்படும். வெளிப்படையற்ற ஒருவரிம் இருந்து பெறும் நிதி, கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிற நிலையில் அவரது காசோலை அவருக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படும்.

8.தேர்தலில் எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பொதுமக்கள் பங்கு பெறும் பல் நேரடி நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படையான விவாதங்களுக்கு தயாராக உள்ள கட்சியுடன் விவாதித்து அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளும்போது, அக்கட்சியின் 5 வருடங்களுக்கான நிபந்தனையற்ற ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும்.

9.கட்சிக்காக ஒரு சிறு குண்டூசி முதல் கணனி வரை செய்யப்படும் செலவுகள் உட்பட, அங்கத்துவம் செயற்பாடுகள், முறைப்பாடுகள் யாவும் கணனிமயப்படுத்தப்பட்டு இணையம் மூலம் அது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்டும்


ஆட்சிக்கு வந்தால் முதலில் கவனிக்கப்பட வேண்டி விடயங்கள்

1.தமிழகத்தில் அதிக வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய தொழிற்சாலைகளை நிறுவுதல்.
2.தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லும் எல்லா செயல்களை ஊக்குவித்தல்
3.காவற்துறை/நீதித்துறையினை அரசியல் தலையீடுகள் அற்ற ஒரு பூரண சுதந்திர அமைப்பாக மாற்றுதல், கூடவே ஏற்கனவே ஊழல் புரையோடிவிட்ட பெருந்தொப்பைகளை கட்டாய பணி விடுப்பில் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, புதிதாக அதிக எண்ணிக்கையான, துடிப்பான இளைஞர்களை காவற்துறையில் சேர்த்துக்கொள்வதன்மூலம் ஊழலை முற்றாக கட்டுப்படுத்தல்.


என்ன இது ஆளுக்கு மண்டை கழண்டுபோச்சோ எண்டு நினைக்கிறியளோ?

இல்லை.

ஊழலை ஒழிக்க, தமிழகத்தை முன்னேற்ற என்று, பெருசா பந்தல் எல்லாம் போட்டு, மாநாடு வைச்சு யாரோ இண்டைக்கு புதிசா கட்சி தொடங்கிறாராம், அது உண்மையிலேயே ஏதாவது ஒரு கட்சியின் வாக்கு வங்கியை பிரிப்பதற்காக, மாற்றுக்கட்சியினர் கொடுத்த பெட்டி
காரணமாக இல்லையெனில் கட்சியின் கொள்கைகள் எப்பிடியிருக்கும் எண்டு யோசித்ததில் வந்த வினை அவுவளவுதான்.

எதற்கும் இருக்கட்டும் எண்டு ஒரு டிஸ்கிளைமர்:

1.மேற்குறிப்பிட்ட கட்சிப்பெயரையும் கொள்கைகளையும் விரும்பிய எவரும் பயன்படுத்தலாம், அப்படி பயன்படுத்துமிடத்து கட்சியின் தத்துவாசிரியர் என்று எனது பெயரை அறிவித்தல் வேண்டும்.எதிர்காலத்தில் கட்சியை கைப்பற்றும் நோக்கம் எனக்கு இல்லை,
அதனால்தான் கொ.ப.செ பதவியை நான் கேட்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவும்.

2.மேலும் கட்சியில் வலைப்பதிவாளர் அணி என்று ஒன்று உருவாக்கப்பட்டல் வேண்டும்

வாலைப்பதிவாளர் அணிக்கு கொ'ப'செ யாரு? இன்னும் யாரையும் எடுக்கலைதானே?

என்னையே போட்டுருங்கன்னு 'சிபாரிசு' செய்யறேன்

ஆமா விஜயகாந்தோட புதுக் கட்சிக்குப் பேரு வச்சாச்சாமா?

நீங்கள் தருமிக்குப் போட்டியாக வந்துவிட்டியளோ எண்டு நினைச்சன்.
பதவி வேண்டாமெண்டு சொல்லீட்டியள்.

சூப்பர் பதிவு, குமரேஸ் :)

Post a Comment

Links to this post

Create a Link