« Home | இடைத்தேர்தல் முடிவுகள் - 2006 அச்சம் » | வரலாற்றுப் பெருமை கொண்ட "புட்டு" » | கவிஞன் என்பவன் யார் ? » | தூய தமிழ்? » | பழைய பஞ்சாங்கமும்,,,,, »

திருப்பதி அல்வா


Image hosted by Photobucket.com


சில வருடங்களுக்கு முன்னால், தமிழ் நாட்டின் ஏதோ ஒரு பின் தங்கிய கிராமத்தில், கல்வியறிவு குறைந்த யாரோ ஒரு சிலரால், அந்த நாட்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள். இவ்விடயம் தலைநகரத்தில் கல்வியறிவுமிக்க(?)வர்களால் நடத்தப்படும் தமிழ் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளளால் மிகைப்படுத்தப்பட்டு உலகெங்கும் செய்தியாக்கப்பட்டது.

உண்மையில் இச்செயல் அக்குறிப்பிட்ட சிலரின் சிறுபிள்ளைத்தனமான, தற்காலிக விளம்பர யுக்தியே அன்றி வேறு எதுவுமே இல்லை. இதனை பத்திரிகை தர்மத்தை மீறி, தங்கள் பத்திரிகையின் விற்பனையை அதிகரிப்பதற்கு கிடைத்த இலவச சந்தர்ப்பமாக இப்பத்திரிகைகள் பயன்படுத்தியுள்ளனர்.

பத்திரிகைகளில் குறிப்பிட்டபடி "கோவில்" என்பதற்கு உரிய பண்புகள், அதாவது மற்றைய கோவில்களில் காணப்படுகின்ற பொதுவான விடயங்கள் - மூலஸ்தானம், பூசை முறைகள், பூசாரி,,,, இப்படி எதையும் அக்கோவில் கொண்டிருந்ததா? இதில் எந்த அளவு உண்மை என்பதை யாருமே பார்க்கவில்லை. (இப்படிஎல்லாம் அமையப் பெற்றிருக்கும் என்றும் நான் நம்பவில்லை).

இதனால் இன்று, தமிழ் இணையம் உட்பட, பட்டிமன்றங்கள், விவாத மேடைகள் எல்லா இடங்களிலும், முதன்முதலில் ( இது வேறு பெருமை?)தமிழ் நாட்டில்தான் (தமிழர்கள்தான்) நடிகைக்கு ( அதுவும் வேற்று இன நடிகை என்ற நக்கல் வேறு) கோவில் கட்டிய முட்டாள்கள் என்ற அளவிற்கு தமிழர்களாலேயே மீண்டும் மீண்டும் ஏளனமாக பேசப்படுகின்றது.

இதற்கு மூல காரணம் தமிழ் நாட்டு பத்திரிகைகளும் அவற்றை நடத்துகின்றவர்களின் ஆதிக்கமுமே.

இதே பத்திரிகைகளுக்கு அவர்கள் சார்ந்தவர்களின் முட்டாள் செயல்கள் கண்ணுக்கு தெரியாது. அல்லது அது ஒரு விடயமாக பத்திரிகைகளில் போடவும் மாட்டார்கள். ஏன் வலைப்பதிவுகளில் கூட பதியமாட்டார்கள்.

சரி விடயத்திற்கு வருவோம்!

Information Centre அல்லது தகவல் நிலையம் என்றால் என்ன?
"சம்பந்தப்பட்ட ஒரு விடயம் அல்லது செயல் தொடர்பான அனைத்து தகவல்களை பெறுவதற்குரிய இடம்"

Thirumala-Thirupati Devasthanams Information Centre
திருப்பதி-திருமலை தேவஸ்தானங்கள் தகவல் நிலையம்

என்றால் என்ன?

திருப்பதி-திருமலை தேவஸ்தானங்கள் பற்றிய அனைத்து, அதாவது அங்கு நடைபெறும் பூசைகள் பற்றிய நேரம், அதற்குரிய கட்டணம் என்ன? தங்குவது எங்கே? வேண்டுதல் நிறைவேற்றுதல் எங்கே? இப்படி நிறைய எங்கே/எப்படி என்ற தகவல்களை மக்களுக்கு அதுவும் சென்னையில் உள்ளவர்களும், சென்னை வழியாக திருப்பதி செல்பவர்களும் அறிவதற்காக அமைக்கப்பட்ட தகவல் நிலையம்.

உரியவர்கள், இது தகவல் நிலையம்தான், என்பதை பல மொழிகளில் பெயர்ப்பலகையில் எழுதி வைத்துள்ளார்கள். அதாவது எங்களால் தகவல் நிலையம்தான் என்று அறிவிக்கப்பட்ட இடத்தை நீங்கள் உங்கள் முட்டாள்த்தனமான எண்ணங்களால்/செயல்களால் "கோவில்" என்று கொண்டாடுவீர்கள் என்றால் அதற்கு நாம் பொறுப்பு இல்லை என்பதுதான் இந்த பல மொழி அறிவிப்பு பலகையின் அர்த்தம்.

எனக்கு தெரிய, இதே இடம் 1987 இல், ஒரு சிறிய அறையும் இரண்டு மேசைகளுடன், இரண்டு அலுவலர்களுடன் இருந்தது. நான் முதன்முதலில் இங்குதான் போய் எனக்கு தேவையான தகவல்களைப் பெற்றேன்.

அன்று தகவல் நிலையமாக இருந்த இடம் இன்று கோவில் ஆகிவிட்டது.(ஆனால் இன்றும் தகவல் நிலையம் என்றுதான் பெயர்ப்பலகை உள்ளது).

இன்று இங்கு நடப்பவை எல்லாமே தலைகீழ்.

ஒரு கோவிலில் என்னவெல்லாம் நடக்குமோ அவையெல்லாம் இங்கு நடாத்தப்படுகின்றன. (இது பற்றி Los Angeles Ram எழுதிய பதிவில் பார்கலாம்) அதுவும் திருப்பதியில் வரிசையாக நின்று போவது போல் இங்கும், இப்படியாக ஒரு தகவல் நிலையத்தினை கோவில் என்ற நிலைக்கு கொண்டுவந்தவர்கள், நடிகைக்கு கோவில் கட்டியதாக சொல்லப்படுபவர்கள் போல் படிக்காத பாமர வெள்ளந்திகள் இல்லை, அரசாங்கத்திலும் ( இங்கு, அரச "G" வாகனங்களில் வந்து இறங்குவோரை பார்க்கலாம்) மெத்தப் படித்த உயர் பதவிகளில் உள்ளவர்களும், கூடவே இதனைக் கோவில் ஆக்கினால் வருமானம் பார்கலாம் என்ற வியாபார எண்ணம் கொண்டவர்களும் சேர்ந்தே இந்நிலையை உருவாக்கி உள்ளார்கள்.

இது ஓர் அப்பட்டமான முட்டாள்த்தனமான செயல்.

ஒரு நடிகைக்கு கோவில் கட்டுதல் போன்ற முட்டாளத்தனமான செயலுக்கு ஈடான செயல், ஒரு தகவல் நிலையத்தினை கோவில் ஆக்கியது.

இந்த முட்டாள்த்தனத்தைப் பற்றி, தமிழக பத்திரிகைகள் எவருமே கண்டுகொள்வதில்லை ஏன்?

"திரு" வின் கூற்றுப்படி "நான் தூணிலும் இருப்பேன், துரும்பிலும் இருப்பேன்" என்பதற்கமைய தி.நகரிலும் இருப்பதனாலா?

அப்படி நினைப்பவர்கள், தங்கள் வீட்டு........ல் கூட தேடலாமே? ஏன் தி.நகருக்கோ அல்லது திருப்பதிக்கோ போகவேண்டும்?

சரி, "திரு" வின் கூற்றுப்படி, அவரும் பக்தர்களின் எதிர்கால நன்மை கருதி இப்படி சொன்ன பின்னரும், அவரது கூற்றுக்கு முரணாக, இப்படியான தேவஸ்தானங்களை உருவாக்கி, பக்தர்களின் செல்வங்களை பெற்று, உலகிலேயே காணிக்கை பெறுவதில் முதலாவது இடம் இல்லை இரண்டாவது இடம் என்று பெருமை கூறி, அச் செல்வங்களை/பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் இடைத்தரகர் கூட்டம்தான் யார்?


இதைத்தான் சொல்லுறது திருப்பதி அல்வா.

////சில வருடங்களுக்கு முன்னால், தமிழ் நாட்டின் ஏதோ ஒரு பின் தங்கிய கிராமத்தில், கல்வியறிவு குறைந்த யாரோ ஒரு சிலரால், அந்த நாட்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள்.///
குமரேஸ்,
நீங்கள் சொல்வது சரிதான். கட்டியது திருச்சிக்குப் பக்கத்தில் ( பாரதிதாசன் பலகலைக்கழகம் செல்லும் வழியில் என்று நினைக்கிறேன்). உண்மையில் அதைக் கோயில் என்று சொல்ல முடியாது. கட்அவுட் வைத்ததைவிட கொஞ்சம் அதிகம் அவ்வளவே, அதுவும் சில இளைஞர்கள் குறும்புக்காய்ச் செய்ததே. சில நாட்களில் அதை இடித்துவிட்டார்கள். ஆனால் விஷ்யம்தான் மிகைப்படுத்தப்பட்டுவிட்டது. தமிழர்களைக் கிண்டல் செய்ய விஷயம் தேடுபவர்களுக்கு தினமும் மெல்லும் அவலாகிவிட்டது.

மிகைப்படுத்தப் பட்டதால் யாருக்கும் பயனில்லாதது நீங்கள் முதலில் சொன்னது. சரி.
இரண்டாவது சொன்னது அப்படியல்ல.
ஏனென்றால், இங்கு முறையாக பூஜை நடக்கிறது.
உங்களுக்கு நம்பிக்கை இல்லாததால், அதில் பொது மக்களுக்கு பயனேதும் இல்லை என்றாகாது. உங்களுக்கு தான் கால விரயம்.

உங்களுடைய இந்தப் பதிவை முன்பே பார்த்துவிட்டேன் குமரேஷ்., குஷ்புக்கு கோவில் கட்டுனாங்கன்னு எங்க ஊருக்கே (திருச்சிக்கு) கெட்ட பேர்., 'ஒக்கடுன்னு' ஒரு தெலுங்குப் படத்துல இந்தச் செய்திய(கோவில் கட்டுனத)., அந்திர மக்களுக்கு எடுத்துச் சொல்றாரு பிரகஷ்ராஜ் காரு!!., மலையாளிகளுக்கு நாம பண்டி., தெலுங்குகராங்களுக்கு எடுத்துச் சொல்லி நம்மள்ப் பத்தி புரிய வைக்கிற நடிகர்களுக்கெல்லாம் பங்களா... இங்கதான்., காரு இங்கதான்... சொந்த பந்தம் கூட இங்கன சென்னையிலதான் அட தேவுடா!!.

பழனி கோயிலில் பல கோடி செலவில் புதிய மண்டபம் கட்டியிருக்கிறார்கள்.
மண்டபத்தின் பெயர் 'அன்னை சந்தியா மணி மண்டபம்'. மக்கள் வரி பணத்தில்
கட்டிய மண்டபத்திற்கு முன்னாள் நடிகையின் பெயர். ஜெயா மண்டபம் என்று
வைத்திருந்தாலும் முதலமைச்சர் என்ற அளவில் ஏற்றுக்கொள்ளலாம்.

Post a Comment