« Home | கவிஞன் என்பவன் யார் ? » | தூய தமிழ்? » | பழைய பஞ்சாங்கமும்,,,,, »

வரலாற்றுப் பெருமை கொண்ட "புட்டு"



Image hosted by Photobucket.com


மாம்பழ சீசன் வந்தாலே எனக்கு கொண்டாட்டம்தான், அந்த அளவிற்கு மாம்பழப்பிரியன், எப்பிடியும் கிழமையில மூன்று நாள் வாங்கிவந்து விடுவேன்,

"என்ன, முந்தநாள் வாங்கியதில் இன்னும் இரண்டு பழம் இருக்கெல்லை"
"என்னண்டுதான் தினமும் புட்டும் மாம்பழமும் சாப்பிடிறியளோ தெரியாது"

என்ற வார்த்தைகளை நான் பொருட்படுத்துவதே இல்லை.

அரிசிமா புட்டும் மாம்பழமும் என்றால் போதும், அதற்காக மட்டும் வீட்டில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் நான் வருவேன் என்றால் அது மிகையாகாது.

அதுமட்டும் இல்லாமல் இந்த மாம்பழங்களை சீவும் போது, மருமக்களை (அக்கா, தங்கையின் பிள்ளைகள், எல்லோருமே 4 முதல் 12 வரையுள்ள வயதினர்) சுற்றிவர பக்கத்தில் வைத்துக்கொள்வது வழக்கம்.

அதுத்த இன்னோரு நிரந்தர பஞ்ச் வசனமும் கடைசியில் வரும் (ஏக்கம்?).

"என்னதான் இருந்தாலும் எங்கடை "அம்பலவி", "கறுத்த கொளும்பான்" போல் வராது"

இப்படித்தான் இன்றைக்கு பங்கணப்பள்ளி மாம்பழத்தை சீவி முடித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது,

ஒரு மருமகன், இவன் கொஞ்சம் ஆர்வக்கோளாறு பேர்வளி,

"ஏன் மாமா, நீங்க புட்டும் மாம்பழமும் சாப்பிடுறது போல் இடியப்பமும் மாம்பழமும் சாப்பிடுறதில்லை?"

"இரண்டுமே அரிசிமாவில் அவிக்கிற சப்பாடுகள்தானே?"

எனக்கு பதில் சொல்லமுடியவில்லை.

இவ்விடயம் என்னுள் பல கேள்விகளை எழுப்பிவிட்டது.

தமிழ் நட்டில் எந்தவோரு சைவ சாப்பாட்டுக்கடைக்கு போனாலும், அங்கு பிரதானமாக இட்லி, வடை, தோசை, சப்பாத்தி, பரோட்டா, பூரி அல்லது ஏதோ ஒரு சாதம் இருக்கும், ஆனால் புட்டு, இடியப்பம் கிடைப்பது மிகவும் அரிதான விடயம்.

இந்த நிலை எப்படி வந்தது?

ஏனென்றால் இவைகளில் எதுவுமே பண்டைய தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்ததாக எந்தவொரு வரலாற்று/புராண கதைகளில் கூறப்படவில்லை. ஆனால் "புட்டு"க்கு வரலாற்றுப் பெருமை உண்டு.

சங்ககாலத்தில், "பிட்டுக்கு மண் சுமந்து பாண்டிய மன்னனிடம் பிரம்படி சிவன் பெற்ற கதை"யும் உண்டு.

இன்றும் ஆவணி மகத்தில் சிவன் கோவில்களில் பிரசாதமாக புட்டு கொடுக்கும் வழக்கம் உள்ளது.

ஆக, இப்படியான வரலாற்றுப் பெருமை கொண்ட "புட்டு" எப்படி பின்தங்கியது என்று அறிவது நல்லது.

ஏற்கனவே "அண்டை அயல்" அருள் (அசைவப்பிரியர் போலும்) தனது மரை பொருளில்

\\ பழந்தமிழர் தாமே வேட்டையாடி பிடித்து உண்பதல்லாமல், புலி அடித்துச் சென்ற மானின் எச்சம், செந்நாய்கள் விட்டுச்சென்ற மானின் எச்சம் இவற்றையும் உண்டனர். அதுசரி, சங்ககாலத் தமிழர் வேறு என்ன விலங்குகளை உண்டனர்? ஆடு, காட்டுப்பசு (ஆமான்), பன்றி, முள்ளம்பன்றி, யானை, மான், முயல், குரங்கு, எலி, பசு ... இந்த மெனு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?\\

என்று கொஞ்சம் அசைவமாக தேடியுள்ளார்.

நாமும் யாரையாவது துணை சேர்த்துக்கொண்டு தேடல் வேண்டும்.

"இட்லி வடை" காரரை கேட்கலாம் என்றால், ஏற்கனவே அவரின் "தமிழ் எழுத்துக்களின் சுடுகாடு"......வுடு ஜூட்.......

அட எங்கட புட்டு பற்றி எழுதியிருக்கிறியள்.
அதுவும் குழல்புட்டின்ர படம்வேற போட்டிருக்கு.
அதுசரி உங்கள் எழுதில் இடைக்கிடை ஈழத்து வாசனை வருதே???
கதைப்பவர்கள் தான் அப்பிடியோ?
என்ன இருந்தாலும் இடியப்பத்துக்கு சொதி,
புட்டுக்கு கறுத்த கொழும்பான் மாப்பழம்
எண்டத மாத்தேலாது.
நல்லாயிருக்குப் பதிவு.

எங்கட அம்மம்மா மூங்கிலிலதான் குழற்புட்டு அவிக்கிறவ. பெரும்பாலும் ஊரில மூங்கில்தான் பாவிக்கிறது. இப்ப அந்தக் குழலெல்லாம் உலோகங்களில வந்திட்டுது. நீத்துப்பெட்டியும் பிளாஸ்ரிக்கில வந்திட்டுதோ தெரியேல.

புட்டு என்பது பழந்தமிழ் உணவுதான் என்பதில் ஐயமில்லை. தமிழரிடத்தில் பழக்கத்திலும் இருந்த உணவுதான். நாளாவட்டத்தில் மாறிப் போய் விட்டது. இன்றைக்கும் சென்னை சரவணபவனில் புட்டு கிடைக்கிறது. இடியாப்பமும் ஆங்காங்கே பரவலாகக் கிடைக்கிறது. எங்கள் வீட்டிலும் செய்வார்கள். ஆனாலும் பொதுமக்களுக்கு பூரியும் உருளைக்கிழங்கு மசாலாவும்தான் ருசிக்கிறது.

பச்சரிசிப் புட்டு, கேப்பைப் புட்டு, கம்பம் புட்டு என்று புட்டுகள் பலவகை. அனைத்துமே நன்றாக இருக்கும். அசைவத்தில் சுறாப்புட்டு இன்றைக்கும் பிரபலம்.

ஆமா! புட்டுக்கு மண் சுமந்தவரு எந்தப் புட்டுக்குச் சுமந்தார்? அரிப்புட்டுக்கா? சுறாப்புட்டுக்கா?

// நீத்துப்பெட்டியும் பிளாஸ்ரிக்கில வந்திட்டுதோ தெரியேல.//
இதுவந்து இடியப்பம் பிழிஞ்சுவிட்டு சட்டிக்குள் வைக்கிற வலைத்தட்டு மாதிரி இருக்குமே அதுவா? அதுன்னா ப்ளாஸ்டிக்லயும் இருக்கு. மூங்கில்லயும்/மரத்துலயும் இருக்கு. திருச்சியில கண்டேன்.

குழாய்ப்புட்டுக்கு ஒரு உலோகக் குழல் வாங்கி அவித்துப் பார்த்தால் புட்டெல்லாம் கறுத்த உலோகத் தூள். பார்த்து வாங்க வேண்டும்!

நல்ல பதிவு குமரேஸ். பிட்டு வரலாற்றை அறிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க!

சந்திரவதனாவின் ஒடியல் பிட்டு, இப்ப நீங்க...அடுத்து யாரு பிட்டு வைக்கப் போறாங்களோ!

Post a Comment