« Home | தூய தமிழ்? » | பழைய பஞ்சாங்கமும்,,,,, »

கவிஞன் என்பவன் யார் ?

சுந்தரவடிவேலின் அவமதிக்கப்படும் ஒரு போராளி இல் ஆரம்பித்த மீள்வாசிப்பு, அதனால் எழுந்த வெங்கட்டின் மீள வாசிப்பும், இப்படியே பலரும் தங்கள் கருத்துக்களை கூற இவ்விடயம் தமிழ்மணத்தின் விவாதங்களில் சிறந்த விவாதமாக கருதப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதனால் என்ன பயன்?

ஐந்து பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடந்ததாக சொல்லப்படுகின்ற ஒரு வரலாற்று/புராண நிகழ்வினைப்பற்றி விவாதித்து நாம் பெறப்போகும் பயன்தான் என்ன?

கடந்து போன பஸ்ஸிற்கு கை காட்டுவதில் என்ன பலன்?

இதை தவிர்த்து,

நிகழ்காலத்தில் உள்ள விடயத்தினை விவாதித்து, முடிவு கண்டு, எதிர்கால சந்ததியினரையாவது குழப்பத்திற்குட்படுத்தாமல் தவிர்க்கலாம்.

இவ்விடத்தில்,

"கவிஞன் என்பவன் நாலு எதுகை மோனையப் போட்டு, கேட்டபோது பாட்டெழுதித் தருபவனில்லை என்பது நினைவுக்கு வருகிறது" -உபயம் சுந்தர்-

என்பது மீள் ஆய்விற்குட்படவேண்டிய விடயமாக நான் கருதுகிறேன்.

நீண்ட நாட்களாகவே
"தமிழகம் உன் பின்னால் வரும்......"
"தமிழ் மண்ணை விட்டு ஓடிவிடமாட்டேன்........."
"............................................................."
என்று பணத்திற்காக, இப்படிப்பல பாட்டெழுதிக்கொண்டிருப்வர்களை கவிஞன் என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்களே!.

இப்படியான சினிமாக் கவிஞர்கள்தான், தமிழினத்தை ஓர் பிற்போக்கான பாதைக்கு இட்டுச் செல்கிறார்கள். இவர்கள் சினிமாவிற்கு அப்பால் சில/பல தரமான படைப்புகளை தந்திருக்கலாம், அவற்றினால் தமிழ் சமுதாயத்திற்கு ஏற்பட்ட நன்மைகளைவிட, சினிமாவில் கதா நாயகர்களை தனி மனித துதிபடுவதால், அதுவும் பல நாயகர்களைப்பற்றி துதிபாடுவதால், ஏற்பட்ட தீமைகளே அதிகம். இன்று உண்மையிலேயே எந்தவித சிறப்புத் தகுதிகள் இல்லாமல், ஆட்சிக் கனவுகளுடன் அலையும் கதா நாயகர்கள் எத்தனைபேர்? அவர்களில் எவன் பின்னால் போவது என்று தடுமாறும் தமிழர்கள்தான் எத்தனைபேர்?

ஆனால் ஒரே சினிமாக் கவிஞர், ஒரு கதாநாயகனை "பொன்மனச் செல்வன்" என்றும் இன்னொரு கதாநாயகனை "தங்க மனசுக்காரன்" என்று துதி பாடியிருப்பார்.இதற்காக இவருக்கு கிடைத்ததோ பணம். ஆனால் அடிமட்டத்தில், ஏதோ ஒரு கிராமத்தில் தமிழ் சமுதாயம், "பொன்மனச் செல்வன்" பெரியவனா? "தங்க மனசுக்காரன்" பெரியவனா? என்று அடிபட்டுக் கொண்டிருக்கும்.

இதைவிட தமிழர் அல்லாத மற்றோரையும்

"நீதான் அழகன், நீ நடந்தால் அழகு..."
"உன்னால்தான் தமிழ் நாட்டிற்கு விடிவு..."
"நீதான் தமிழ் மண்ணை ஆள்வாய்...."

என்று தமிழை விற்றுக்கொண்டிருக்கிறார்களே.

இவர்களை எதிர்கால தமிழ் சந்ததியினர் எவ்வாறு பார்க்கப்போகிறார்கள்? தன்மானக் கவிஞர்களாகவா? இல்லை மாற்றான் தற்பெருமைக்காக தமிழை விற்ற கவிஞர்களாகவா? இல்லை கவிஞர்கள் என்போர் சினிமா கலைஞர்களில் ஒரு பிரிவினர் அவ்வளவுதான் என்றா?

இதை விவாதித்தால் என்ன!

தான் சார்ந்த கழகத்திற்காகவும் அதன் தலைவனுக்காகவும் எழுச்சிப் பாடல்களை எழுதி, அவற்றை தன் கணீரெண்ற குரலால் பாடி பெருமை சேர்த்துக் கொண்டிருந்த ஒரு கவிஞர், அதே தலைவனின் போர்வாள், படைத் தளபதி, அதுவும் ஈழத்தமிழன் துயர் போக்குவதற்காக அண்டை நாட்டிற்கு அனுமதியின்றி போய் வந்ததை பாட மறுத்ததையும் பத்திரிகைகளில் படித்த ஞாபகம் உண்டு. இந்த கவிஞரரைப்பற்றி எதிர்கால தமிழ் சந்ததியினர் குழப்பத்திற்கு வரமாட்டார்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

குமரேஸ்,வணக்கம்! ரொம்ப,ரொம்ப நியாயமான கேள்விகளை முன் வைத்துள்ளீர்கள்.தமிழ்பேசும் மக்களின் நலன்நோக்கிக் கேட்கப்பட்ட கேள்வி.அப்படியே இந்தச் சினிமாவை யார்,யார் கட்டுப்படுத்தியுள்ளார்கள்-யார் கைகளில் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் இருக்கிறது,யார் தமிழ் நாட்டு ஆட்சியை-அதிகாரத்தைக் கைகளில் வைத்துள்ளார்களெனக் கேட்டுக் கொண்டால் தங்கள் கேள்விக்கான பதில்கள் நிச்சியம் தென்படும்.தமிழ் பேசும் மக்களை இன்றும் சினிமாவுக்கு விசிலடிக்கும் கூட்டமாக வைத்துக்கொண்டு தமது பொருளாதாரத்தை காத்து வரும் தமிழ்பேசாத தமிழர்கள் எமது வாழ்வைக் கருவறுக்க வைத்திருக்கும் முதல் ஆயுதம் சினிமா.இதைத் தாண்டித் தமிழ்பேசும் மக்கள் மேலெழுந்து காரியமாற்றத் தமிழ் மக்களிடம் >>>'பாரிய நிறுவனப்பட்ட சாதியமைப்பு'<<< விடுவதில்லை.இவையெல்லாம் நம்மைத் தாழ்த்த நம் பகைவர்கள் போட்ட திட்டமே.இதை உடைத்திட கட்டுடைப்பு மட்டுமல்ல, தேவையேற்படும்போது மண்டையுடைப்பும் தேவை.

பணத்தின் ருசிகண்ட பூனைகள் வேறு மாதிரி எழுத வேண்டுமென எதிர் பார்ப்பதே நமது தவறு!. என்றைக்கு 'தனி மனித' துதியை (அரசியலாகட்டும், சினிமாவாகட்டும்)ஒழித்து கட்டுகின்றோமோ அன்றைக்குத்தான் உருப்படுவோம்!. ஒரு மூன்று மணிநேரம் பொழுதுபோக்குவதற்காக பார்க்க கூடிய ஊடகம் தான். அதில் மூன்று வருடம் நிலைத்து விட்டாலே.... நாற்காலியைப் பிடித்து உக்கார்ந்து கொண்டு வாழ்நாள் முழுவதும் மக்கள் வரிப்பணத்தில் நன்றாக தங்கள் பொழுதைப் போக்கிக்கொள்ளலாம் என்கிற துணிவை இவர்களுக்கு கொடுத்தது வேறுயாருமல்ல நாம்தான்!. சினிமாப் பாட்டுதான் இலக்கியமே இன்றைய தலைமுறைக்கு, யார் அறிமுகப்படுத்துகிறார்கள் நல்ல தமிழ் என்பதை?., நமக்குத்தான் நம்முள் அடித்துக் கொள்ளவும், அடுத்தவனைப் பிடித்து கீழே (நம்மவர்களைத்தான்! வந்தாரைத்தான் நாம் வாழவைப்போமே?) தள்ளவும், ஜோல்னாப்பையை மாட்டிக் கொண்டு ஒதுக்குபுறமுள்ள கடற்கரையில் கூட்டம் போடவும் (அட அதை மக்களுக்கு வசிக்கும் இடங்களுக்கு பக்கத்தில் போட்டாலாவது என்னமோ ஏதோன்னு சின்னப்பசங்க திரும்பி பாப்பங்க!), பின் நவீனத்துவங்கிற (புடலங்கா!) பேர்ல ஆபாசமா எழுதி அதிர்ச்சி தர்றதுன்னு ஆயிரம் வேலை இருக்கே!, நம்ம இளைஞன் ஒருவனை அழைத்து காலச்சுவடு, தீராநதி இதெல்லாம் என்ன என்று கேட்டுப்பாருங்கள்... காலச்சுவடு...? தீராநதி.....யா? எப்ப 'ரிலிஸ்' ஆகும் தீபாவளிக்கான்னு கேப்பாங்க சத்தியமா? !, தப்பித்தவறி தெரிஞ்சு இருந்தா அந்தப்பிள்ளை தமிழ் வாத்தியார் மகனா இருப்பான் அல்லது தமிழ் எழுத்தாளரோட மகனா இருப்பான். நம்ம பிள்ளைகளுக்கு தெரிஞ்ச இலக்கியமெல்லாம் ஒன்று வாரமலர், ஆனந்தவிகடன் இல்லாட்டி அவன் படிச்ச பாடத்திட்டத்தில் வரும் மனப்பாட செய்யுள் அப்புறம் பாப்பையா அய்யா புண்ணியத்துல பட்டிமன்றம்!. எவ்வளவோ பேர் படிக்கும் இணயத்தில் எமது இளைஞர்களை குறைகூறுவதல்ல என் நோக்கம்!. உண்மையில் மனம் வருந்துகின்றேன்! வல்லரசுகளைத் தூக்கி வளர்க்கும் மென்பொருள் படைக்கும் திறன் உள்ளது நம்மிடம், மொழி உணர்வென்பது இல்லை. எந்தமொழியை வேண்டுமானலும் கற்றுத் தொலையுங்கள், தமிழை மறக்காதீர்கள்!. காலம் சென்றால் 'அம்மா' என்பவளால் பயன் குறைவுதான், ஆனால் அவள் தானே நமது அடையாளம்! ஆதயம் தேடும் அரசியல்வாதி என்றாலும் நன்று சொன்னால் ஏற்போமே!. தமிழ்நாட்டுல தமிழ்ல பேர் வையுங்கன்னு! யாராவது சொல்லும் நிலைமையில் இருப்பதே வெட்ககேடல்லவா?. இவ்வளவு பேசுற உனக்கு, இதுக்கு தெரியுமா தமிழ் வார்த்தை, அதுக்கு தெரியுமா தமிழ் வார்த்தைன்னு ஆரம்பிக்கரவுங்க சொன்னிங்கன்னாத் தெரிஞ்சுக்கிறேன்... படிக்கின்ற நிலைமையில் தான் அனைவரும் இருக்கிறோம். மற்றுமொன்று, சினிமாவில் வாய்ப்பிழந்த அல்லது வயசாகி இன்னமே பாட, ஆட முடியாதவங்க எல்லாம் தமிழ் நாட்டுக்கு வந்து ஆளே இல்லம இருக்கிற தமிழ்நாட்டு முதல்வர் பதவில உட்கார்ந்து கொள்ளலாம் என்று எந்த ஆங்கிலப் பத்திரிக்கை (அதுதான இந்தியாவுல எல்லா மாநிலத்திலும் சினிமா நட்சத்திரங்கள் படிப்பது?, வேறு ஒன்றும் உள்நோக்கம் இல்ல...சாமி!)யிலாவது விளம்பரம் வந்தால்கூட இப்படியேதான் இருப்போமா?... நமது நாட்டில் எல்லா மறுமலர்ச்சியும் வெளிநாட்டில் வாழ்ந்த இந்தியர்களால் தான் ஏற்பட்டிருக்கிறது. காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதுதான் சுதந்திரத்தைப் பற்றி சிந்தித்தார்!.

பதிவு ஆரம்பிச்சதப் பற்றிச் சொல்லவே இல்ல?
நல்லாயிருக்கு பதிவு.
தொடர்ந்தும் எழுதுங்கோ.

//கடந்து போன பஸ்ஸிற்கு கை காட்டுவதில் என்ன பலன்? //
குமரேஸ், அந்த பஸ் கிளப்பிய புகையில் பலர் கண்களைக் கசக்கிக் கொண்டிருப்பதாகப் படுகிறதால்தான்! கம்பன், ராமன், சீதை இவர்களின் ஆளுமையால் பாதிக்கப் படாத சினிமாப் பாட்டுக்காரர்கள் ரொம்பக் குறைவே.

தொடர்ந்து எழுதவும். வசந்தனை/சயந்தனைத் தெரியுமோ உங்களுக்கு?:))

சுந்தர வடிவேல் அவர்களே!, தயவு செய்து எந்த வசந்தன் என்று தெளிவு படுத்துங்கள்!

//கவிஞர்கள் என்போர் சினிமா கலைஞர்களில் ஒரு பிரிவினர் அவ்வளவுதான் என்றா?//

சரியாகச் சொன்னீர்கள்

ஓய்!
சுந்தர வெடி வேலா! (நன்றி மொடேன் கேர்ள்)
சயந்தன் இதுக்க எங்க வந்தார்?
குமரேசை எனக்குத் தெரியாது. அவரைப் பின்னூட்டங்களில் அறிந்ததைத் தவிர வேறு பழக்கமில்லை. சும்மா ஒரு அறிமுகத்துக்காக அப்பிடிச் சொன்னேன். உடனே நேரிலே தெரிந்திருக்க வேண்டுமா என்ன? எனக்குப் புரிகிறது, உங்களுக்குத் தெரிந்த ஒருவரை அறிந்திருக்கும் மற்றவர்கள் பற்றி அறியும் ஆவல்தானே?

Post a Comment

Links to this post

Create a Link