« Home | வரலாற்றுப் பெருமை கொண்ட "புட்டு" » | கவிஞன் என்பவன் யார் ? » | தூய தமிழ்? » | பழைய பஞ்சாங்கமும்,,,,, »

இடைத்தேர்தல் முடிவுகள் - 2006 அச்சம்

1. தற்காலிகமாக காணமல் போயிருந்த மதில் மேல் பூனை தலைவர் மீண்டும் வரலாம்.

2. காமராஜர் ஆட்சி கோஷம் வீரியம் கூட்டப்படலாம்.

2a.மத்திய நிதி தலைமையில், புதிதாக வர இருப்பவர்களுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமையலாம்

3. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு அண்ணன் உடண்படலாம்

4. தம்பி தனித்து விடப்படலாம் (வெளியுறவுக்கொள்கையால்) அதனால் மீண்டும் இமாலயத்தவறு செய்யலாம்.

5. இடைத்தேர்தல் வெற்றி, மீண்டும் தவறான கவனக்குறைகளை ஏற்படுத்தலாம்

6. தேசிய எதிர்க்கட்சிக்கு தமிழ் நாட்டில் சங்கு ஊதப்படலாம்.

7. கூத்தாடிகளின் ஆட்சிக்கனவு கலையலாம்.

அச்சம் யாருக்குன்னு எழுத மறந்திட்டீங்களே?! (தி.)மு.க.வுக்கு தானே?!

தேசிய எதிர்க்கட்சிக்கு தமிழ் நாட்டில் சங்கு ஊதப்படலாம்.
அப்ப சங்கராச்சாரிக்கு?

அடேயப்பா! 2 இடம் ஜெய்ச்சதவச்சு, பால் ஊத்தி மூடிப்புடிவீங்களே!. அடுத்த சட்டமன்றத் தேர்தல்ல, தி.மு.க தான்.( நான் தி.மு.க அனுதாபி அல்ல என்று, இந்த நேரத்தில் உங்களுக்கு எல்லாம் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்!!!) , எழுதி வச்சுக்கங்க எல்லாரும்!. கூட்டணி ஆட்சியா?...எங்க? தமிழ் நாட்டுலாயா?...நிதி... கரைக்குடிக்கே பொடிநடயா போக வேண்டியதுதான்...இவரும்தான் பாவம்! பண்ணாத முயற்சியா? 'வாய்ஸ்' கூட வற வச்சுத்தான் பாத்தாரு!. மத்தபடி, வரும் நம்மூர்ல கூட்டணி ஆட்சி, அத்தைக்கு மீசை வந்தால்!

நேற்று வரை சாமி சாமி என்று சொன்ன தேசிய எதிர்கட்சி இன்றிலிருந்து
மாமி மாமி ன்னு சொல்ல ஆரம்பிச்சுடுச்சு, கவனிக்கலையா?

//அடுத்த சட்டமன்றத் தேர்தல்ல, தி.மு.க தான். , எழுதி வச்சுக்கங்க எல்லாரும்!. //

ஆமாம்.. லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு சொல்லுராரு எல்லாரும் கேட்டுக்குங்கப்பா.. இப்படி கருத்து கணிப்பு சொல்லிதானே ரெண்டு மூணு தடவையா 'பெரிசை' கவுத்திட்டீங்க?!

பெரிசு 'கருத்து கணிப்ப' நம்புற ஆளுன்னு நினைச்சிங்கன்னா! உங்களை நினைச்சு சிரிப்புதான் வருது!!. காஞ்சிவரத்துல அவர் நம்புனது 'அவாள'., கும்மிடிப்பூண்டில அவர் நம்புனது ராமதாஸ் அ!. மொத்ததுல இப்பத் தோத்தா 'அம்மா' உசாராயிரும்னு சனங்களுக்குத் தெரியும்...ஜெயிச்சா உடனே கலைச்சிட்டு கச்சேரிய வச்சுருங்கறதும் புரியும்!. அடுத்ததுல 'பெரிசு' ஜெயிச்சா, அடிச்சுக்குவாரா மொட்டை மாயவரத்து மைனர்?

பெருசு ஜெயித்தாலும், பச்சை பாப்பா ஜெயித்தாலும் , தோற்கப்போவது என்னவோ நம்ம ஊரு பொது ஜனம் தான் பா !!!

//அடுத்ததுல 'பெரிசு' ஜெயிச்சா, அடிச்சுக்குவாரா மொட்டை மாயவரத்து மைனர்?//


பெரிசு கருத்துக் கணிப்பை நம்பலையா? யாரு காதிலே பூ மாலையை சுத்துறீங்கக்கோவ்?!

அட.. பெரிசு ஜெயிச்சா நான் மொட்டை அடிச்சுக்கணுமா? இதென்னடா வம்பா போச்சு?! கவலையே பாடாதீங்க.. பெரிசு ஜெயிச்சா எல்லருக்குமே 'மொட்டை' தான்! (அவரது பையன், பேரன்களைத் தவிர!)

இப்போ பெரிசு தோத்திடுச்சே.. நீங்க மொட்டையா அடிச்சுகிட்டீங்கன்னு பதிலுக்கு கேள்வி கேக்கலாமா? எது எதுக்கு மொட்டை அடிக்கிறதுன்னு வெவஸ்தை வேணாமா?!

Post a Comment